கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர் களுக்கு குறுவளமைய பயிற்சி முகாம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு குறுவளமைய பயிற்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக்கச்சிபட்டி நடுநிலைப்பள்ளி, வட்டார வளமையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி) செந்தில் பார்வையிட்டு அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்று அதில் வழங்கக் கூடிய கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்க்க வலியுறுத்தி பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அந்த குழந்தைகளை மொழிப் பாடங்களில் சரளமாக வாசிக்கவும் அடிப்படை கணித அறிவையும் மேம்படுத்தவும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தார்.
மேலும் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து பள்ளிச் செயல்பாடுகளையும் சிறப்பாக செய்திட வலியுறுத் தினார். பார்வையின் போது முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜு , வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
பயிற்சியில் எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகளில் உள்ள ஐயங்களும் அதன் தெளிவுரைகளும் என்ற தலைப்பில் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஜெயசுதா , ஜெயலட்சுமி, கலைவாணி, தேவ ஆரோக்கிய நாதன், சண்முகம் , உதயக்குமார் ஆகியோர் கருத்தாளர் களாக செயல்பட்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ் குமார், சங்கிலி முத்து, பாரதிதாசன், நந்தினி, ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 168 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.