கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

பராமரிப்பு உதவித்தொகை அரசு வேலை வாய்ப்புகளில் 4% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது

Update: 2023-12-05 08:30 GMT

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கந்தர்வகோட்டை, கொத்தகப் பட்டி  நடுநிலைப்பள்ளியில் மாற்று திறன் மாணவர்களுக்கான சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்பொழுது மாற்று திறன் மாணவர்களுக்கான அரசு வழங்கக்கூடிய சலுகைகள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைக ளுக்காக சர்வதேச மாற்றுத்திறனாளி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தினத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது என்றும், மாற்றுத்திறன் மாணவர் களுக்கு கல்வி உதவி தொகை, போக்குவரத்து பயணம், பராமரிப்பு உதவித்தொகை அரசு வேலைவாய்ப்புகளில் 4% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அளவில் மாற்றுத்திறன் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. 40 சதவீதத்திற்கு மேற்பட்ட அடையாள அட்டை பெரும் மாணவர்கள் அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர் என்றும் பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலைமணி, சுகன்யா,அடைக்கல ஜெயராணி, மாலதி உஷா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News