பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கட்டணமில்லா சேவை
Free service to apply online to engineering colleges;
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு கட்டணமில்லா சேவை நடைபெறுகிறது.
இது தொடர்பாக கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ.அசோகராஜன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை TNEA – 2022-2023 இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு கட்டணமில்லா சேவை மையமாக (TFC) இக்கல்லூரி செயல்படுகிறது. ஆகவே, +2 முடித்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்சேவை மையத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பம் மற்றும் பொறியியல் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை மற்றும் பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கல்லூரி வளாகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும். கல்லூரி முகவரி 137, அரசினர் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி, புதுப்பட்டி கிராமம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆகும் என கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ.அசோகராஜன் தெரிவித்துள்ளார்.