பேரூராட்சி கடைகளை சட்டத்திற்குப் புறம்பாக புதுப்பித்து வருவதாக புகார்

பொது ஏலம் நடத்தி, அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி, அரசு அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்

Update: 2021-08-28 10:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி கடைகளை சட்டத்திற்குப் புறம்பாக புதுப்பித்து தருவதாக செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது

கறம்பக்குடியில் உள்ள பேரூராட்சி கடைகளை 25 ஆண்டுகளாகமாக பொது ஏலம் பெயரில் சட்டத்திற்கு புறம்பாக புதுப்பித்து வருவதை கண்டித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட தரை வாடகை கடைகள் பொது ஏலம் விடப்படாமல் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு புதுப்பித்து கொடுக்கப்படுவதாக  சமூக ஆர்வலர்கள் செயல் அலுவலரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தேர்வுநிலை பேரூராட்சி ஒன்று இயங்கி வருகிறது. நிர்வாகத்திற்குட்பட்ட தரை கடைகள் பேரூராட்சி கடைகள் கடந்த 25 ஆண்டுகளாக பொது ஏலம் நடத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக புதுப்பித்து கொடுத்து வருகிறார்கள். தற்போது கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி பொறுப்பின் கீழ்தரை வாடகைக்கு கொடுத்த இடத்தை எவ்வித அனுமதியும் பெறாமல் உள்ளது.


சட்டவிரோதமாக மூன்று அடுக்கு மாட மாளிகை கட்டி உள்வாடகைக்கு விட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் பயனாளிகளிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சி இடத்தினை மீட்டு, மாவட்ட நீதிபதி முன்பு பொது ஏலம் நடத்தி அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி, அரசு அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர். மேலும் ,இது குறித்து மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி துறை முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை செயற்பாட்டாளரான எழுத்தாளர் துரைகுணா புகார் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News