எய்டு இந்தியா சார்பில் 5 இலவச வீடுகள்: எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல்

கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் 5 இலவச வீடுகளுக்கான அடிக்கல்லை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை நாட்டினார்.

Update: 2023-02-08 16:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் 5 குடும்பங்களுக்கு இலவச வீடுகளுக்கான அடிக்கல்லை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை நாட்டினார்.

எய்டு இந்தியா சார்பில் 5 இலவச வீடுகள் எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் 5 குடும்பங்களுக்கு இலவச வீடுகளுக்கான அடிக்கல்லை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை புதன்கிழமை நாட்டினார்.

எய்டு இந்திய நிறுவனம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் கஜா புயலில் பாதிகக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீடுகளை கட்டிக்கொடுக்கப்படுகிறது. மற்றும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. அதனொரு பகுதியாக கந்தர்வகோட்டையை அடுத்து புனல்குளத்தில் ரூபாய் 12 லட்சம் மதிப்பில் 5 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு கந்தர்வகொட்டை தொகுதி சட்டப்பெரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல்லை நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கவிஞர் கவிவர்மன், மாவட்டக் கவுன்சிலர் ஸ்டாலின் நாராயணசாமி, எய்டு இந்தியா நிறுவனத்தின் மாநில இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநில நிர்வாகி சாமிநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வானவில் மன்றக் கருத்தாளர்கள் தெய்வீக செல்வி, வசந்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News