ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார்.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி வடக்கு ஒன்றியம் பெரியாளூர் ஊராட்சியில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
தடுப்பூசி முகாமில் அப்பகுதியில் பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து கோவிட் தடுப்பூசியை போட்டு செல்கின்றனர் இந்த . நிகழ்வில்ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி , சண்முகநாதன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.