நாமக்கல் மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்; டிஐஜி அதிரடி

நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-29 10:30 GMT

பைல் படம்.

நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து சேலம் சரக போலீஸ் டிஐஜி மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சேலம் மாவட்டம் ஓமலூர் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வேலுதேவன் நாமக்கல் டவுன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலகவுண்படம்பட்டி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் நாமகிரிப்பேட்டைக்கும், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் ராசிபுரம் பேலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News