நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு அபாராதம்

நாகையில் கொரோனா விதிமுறைகள் மீறலில் ஈடுபட்ட திருமணமண்டபம், ஜவுளிக்கடை, தனியார் பஸ் ஆகியவற்றிற்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினிர் அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-29 11:15 GMT

நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நாகை அடுத்த பாப்பா கோவில் ஊராட்சியில் உள்ள எஸ்.எம் மஹால் திருமண மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது விழாவில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அரசு விதிமுறைகளை இருந்தும் அதனை மீறி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்திருந்தனர் இதனையடுத்து அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட சுகாதார துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்த தோடு இதேபோன்று தொடர்ந்து நீடித்தால் திருமண மண்டபம் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் நாகப்பட்டினம் கடைத்தெருவில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகளில் ஏசி பயன்படுத்தியதோடு அளவுக்கு அதிகமாக ஊழியர்களை நியமித்து பொது மக்கள் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடியிருந்தனர்.

இதனையடுத்து ஜவுளி கடைக்கு 10000 ரூபாயும், மற்றொரு ஜவுளிக்கடைக்கு 5000 ரூபாயும் அபராதம் விதித்த தோடு ஊழியர்களை பாதியாக குறைக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என சுகாதாரத் துறையினர் எச்சரித்தும் அதனை மீறி அளவுக்கு அதிகமாக நின்றபடி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News