பென்னாகரம் அருகே மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
பென்னாகரம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானதாக, கணவன் போலீசில் புகார் செய்தாார்.;
தர்மபுரி மாவட்டம் பென்னகரம் கோடுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் வயது (36.), கூலித்தொழிலாளி. இவருக்கு சந்திரா.என்ற மனைவியும் அஜய், ஆகாஷ்,. மற்றும் சர்மிளாவை மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி சந்திரா வீட்டில் இருந்த குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் அக்கம் பக்கம் மற்றும் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.