Dharmapuri News-ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-11-07 07:32 GMT

dharmapuri news-ஒகேனக்கல் (கோப்பு படம்)

Dharmapuri News

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Dharmapuri News

கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால், கபிணி மற்றும் கேஆர்எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதனால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. மேலும், கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் விட மறுத்து கர்நாடக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

Dharmapuri News

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பெய்வது குறைந்துவிட்டதால் கடந்த சில நாட்களாக அங்குள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துபோனது. அதனால் அணைகளில் இருந்து நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து போனது.

Dharmapuri News

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 1500 கனஅடியாக நீடித்து வந்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு குறைந்து பாறைத் திட்டுகள் வெளியே தெரிந்தன. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதனால் தமிழக காவிரி கரையோர எல்லைப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

Dharmapuri News

இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Dharmapuri News

வடகிழக்கு பருவமழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தற்போது ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நீர்வரத்து, தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கிறது.

Tags:    

Similar News