ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.9.2021) தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல், யானைப்பள்ளத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான தலைமை நீரேற்று நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியாக ரூ.1585.60 கோடியும் மாநில அரசின் குறைந்த பட்சத் தேவைத் திட்ட நிதி உதவியாக ரூ 307.48 கோடியும் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகையாக ரூ.35.72 கோடியும், என மொத்தம் ரூ. 1928.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி 25.02.2008 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்போதைய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் சீறிய முயற்சியால் ஜப்பான் நிதி நிறுவனத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டு திட்டப் பணிகள் 10.02.2010 அன்று தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3245 ஊரகக் குடியிருப்புகளுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி,௬ பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 4337 ஊரகக் குடியிருப்புகளுக்கும் 1 மாநகராட்சி, 2,நகராட்சிகள் 16 பேரூராட்சிகள் மற்றும் 7582 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தருமபுரி மாவட்டத்தின் மிக அதிக உயரம் உள்ள பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில். பாறைப் பகுதிகள். உயரமான பகுதிகள் வனப்பகுதிகளில் வனவிலங்குகளால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றையும் கடந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் கெலமங்களம் ஒன்றியத்திலுள்ள, பெட்டமுகிலாளம் என்ற குக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 1245.186 மீட்டர் உயரத்திலுள்ளது.
ஒகேனக்கல்லில் தண்ணீர் எடுக்கப்படும் ஆற்றுப்படுகை மட்டம் 246,650 மீட்டர் ஆகும். ஏறத்தாழ 1000 மீட்டர் உயரத்திற்கு பல்வேறு நிலைகளில் நீரேற்றத்திற்குப் பின் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இத்திட்டப் பணிகள் முடிவுற்று, தற்பொழுது மாநகராட்சி, 1 2 நகராட்சிகளுக்கும், 16 பேரூராட்சிகளுக்கும் மற்றும் 7582 ஊரக குடியிருப்புகளுக்கும் தற்பொழுது இடைநிலை திட்ட வடிவமைப்பின்படி குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில பகுதிகளில் குடிநீர் சரிவர கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2021-ஆம் ஆண்டிற்கு வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவான 127 மில்லியன் லிட்டருக்கு பதிலாக தற்போதுள்ள மக்கள்தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு 145 மில்லியன் லிட்டராக ஒகேனக்கல் குடிநீர் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
புளோரைடு பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட 153 குடியிருப்புகளுக்கு கூடுதலாக 7:70 இலட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகாரம் இல்லாத 208 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 819 குடியிருப்புகளில் நீர் செல்ல இயலாத நிலை இருந்தது. இதில் 283 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ளவற்றில் 135 குடியிருப்புகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. 401 குடியிருப்புகளின் குடிநீர் பணிகளுக்கு இப்பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் இப்பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடித்து, இக்குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டார்கள்.
இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி எஸ்.பி. வெங்கடேஷ்வரன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி, ஒதருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். திவ்யதர்ஷினி.மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.