அரூரில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

தருமபுரி மாவட்டம், அரூரில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

Update: 2021-06-02 01:57 GMT

அரூரில்,  ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் சார்பில், உணவுப் பொட்டலங்களை வழங்கப்பட்டன.

கொரோனா முழு ஊரடங்கு காரமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆதரவற்ற பலர் சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு, பல தன்னார்வ அமைப்புகள் உணவுகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில், தருமபுரி மாவட்டம், அரூர் நகரப்பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் சார்பில், தினமும் 600 உணவு பொட்டலங்கள், ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  தினமும் உணவுப்பொட்டலங்களை தயார் செய்து அரூர் பேருந்து நிலையம், அம்பேத்கர் நகர், நான்கு ரோடு, மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் தலா 100 உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கி வருகின்றனர்.

இதுபோன்ற தன்னார்வல அமைப்புகளுக்கு உதவுவதற்காக, பல்வேறு நல்ல உள்ளங்கள், உதவிகரம் நீட்டி வருகின்றனர். சாப்பாடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற  தன்னார்வ அமைப்பினரின் நோக்கத்தை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News