மொரப்பூரில் நகை பாலிஷ் போட்டு தருவதாக வடமாநில இளைஞர்கள் மோசடி..! ஒருவர் கைது..!

மொரப்பூரில் ஒரு பெண்ணிடம் நகை பாலிஷ் செய்து தருவதாகக்கூறி தாலி செயினில் இருந்து ஏழு கிராம் அளவுக்கு தங்கத்தை திருடிய இளைஞர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.;

Update: 2024-09-13 12:10 GMT

செய்திக்கான மாதிரி படம் (கோப்பு படம்) 

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள  ராணிமூக்கனுார் பகுதி அண்ணாநகரைச்  சேர்ந்தவர் நவீன்குமார். இவரது  மனைவி வான்மதி(27) நேற்று முன்தினம் காலை வான்மதி வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத, 2 வாலிபர்கள் தங்க நகைக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.

வான்மதி தன் கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்கத்தாலி செயினை கழற்றி பாலிஷ் போட்டுத்தரும்படி கொடுத்துள்ளார். அதை வாங்கிய வாலிபர்கள், அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கப்பில் செயினை போட்டுள்ளனர். அவர்கள் அந்த கப்பில் ஆசிட் போன்ற திரவத்தை வைத்திருந்தனர். அதில் செயினை போட்டவுடன் செயின் உருகி ஒரு வாடையை ஏற்படுத்தியது.

சந்தேகப்பட்ட வான்மதி அவரது உறவினர்களான மாதேஸ்வரி, அஸ்வினி, சுரேஷ் மற்றும் தியாகு ஆகியோரை அழைத்து  வந்தார்.  அவர்கள் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர். ஓடிஏ முயன்றவர்களை வான்மதியின் உறவினர்கள் மடக்கிப்பிடித்தனர். அதில், ஒருவர் பிடிபட்ட நிலையில், மற்றொருவர் தப்பியோடி விட்டார். 

பிடிபட்டவரை மொரப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பிடிபட்டவரிடம் மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் பிடிபட்டவர்  அகிலேஷ்குமார் மண்டல், 23, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வான்மதியின் நகையை, மொரப்பூரில் உள்ள நகைக்கடையில் எடை போட்டு பார்த்த போது, 7 கிராம் குறைவாக இருந்தது. தப்பியோடிய சுனில் மண்டல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் மொரப்பூர் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வடமாநில இளைஞர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்படும். இதுபோன்ற சம்பவத்தை செய்யக்கூடாது என்று அந்த இளைஞர்களுக்கு போலீசார் அறிவுறுத்தவேண்டும். ஒருவர் செய்கின்ற தவறால் ஒட்டுமொத்த வடமாநிலத்தவரையும் சந்தேகப்பார்வை கொள்ளச்செய்துவிடுகிறது.

ஆய்வாளர் கருத்து 

மொரப்பூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கூறுகையில், "வெளிமாநில நபர்களின் தாக்கத்தால் உள்ளூர் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது அவசியம்."

கடந்த சில மாதங்களில் மொரப்பூர் பகுதியில் இது போன்ற பல நகை மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலங்களிலிருந்து மொரப்பூருக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மொரப்பூரில் நடந்த இந்த நகை மோசடி சம்பவம், உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இது போன்ற மோசடிகளைத் தடுக்க என்ன கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்பது மிகவும் முக்கியம்.

Tags:    

Similar News