அரூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார்
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையம் கிராமத்தில், இன்று அரூர் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்குள்ளை வீட்டின் பின்புறம், கஞ்சாவை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, வடிவேல் வயது 55, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.