வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே பரிதாபம்

அரூர் அருகே வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-07-30 13:45 GMT

தம்பதியரை கட்டிப்போட்டு நகை பணத்தை கொள்ளையடித்த வீடு.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது 65,  அவரது மனைவி சின்னப்பாப்பா (வயது 60 ). இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இரண்டு மகள் உள்ள நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனது மகனோடு செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், தூங்குவதற்காக கதவை அடைத்தார். அப்போது, யாரோ வருவதை பார்த்த அண்ணாதுரை கதவை திறக்கும்போது நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு அண்ணாதுரையை வாயை அழுத்தி பிடித்து கைகள் இரண்டையும் கட்டி ரூம்புக்குள் இழுத்து சென்று விட்டனர்.

அதில் இருவர் சின்னப்பாவாவை பிடித்து வாயில் துணியை அடைத்து கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விடுவேன் என்று மிரட்டினர். சின்ன பாப்பா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை கழற்றிக்கொண்டு மற்ற நகை பணம் எங்கு உள்ளது சாவியைக் கொடு என்று கேட்டுள்ளனர்.

அப்போது முகத்தில் அணிந்திருந்த முகமூடியை கழற்றுவதற்கு முயற்சித்த சின்னபாப்பாவை கன்னத்தில் அடித்து நெஞ்சில் உதைத்து குளியறைக்குள் இழுத்துச் சென்று விட்டனர். பின்பு பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் கோவில் பணம் 2000 உட்பட 7 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவர்களை கட்டப்பட்ட நிலையில் விட்டு விட்டு சென்று இருக்கிறார்கள்.

தட்டுத்தடுமாறி கை கட்டை கழற்றிய அண்ணாதுரை பாத்ரூமுக்குள் இருக்கும் தனது மனைவியை காப்பாற்றி தனது உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர் உதவியோடு குற்றவாளிகள் யார் என்று தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News