கோவை சூலூர் பகுதியில் 7.4 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக 4 பேர் கைது

கோவை சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-22 12:11 GMT

கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் தென்னம்பாளையம் நால்ரோடு அருகே காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாபுராஜ்(24), நாகராஜ் (22) மற்றும் திபுநாயக்(29) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காங்கேயம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (49) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 53 நபர்கள் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 86.610 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News