கருமத்தம்பட்டியில் கார் திருடிய 2 நபர்கள் கைது
Coimbatore News- வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுகப்பிரியா. 30 வயதான இவர், குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறர். இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி இரவு அவரது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் சோமனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (37) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட காரினை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதேபோல சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.