பொள்ளாச்சி நகராட்சியுடன் மாக்கினாம்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
பொள்ளாச்சி நகராட்சியுடன் நமது ஊராட்சியை மாக்கினாம்பட்டி ஊராட்சியை சேர்க்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் அழகிரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது எனவும், இதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
சுடுகாட்டை சுற்றி சுவர்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் ஊராட்சியில் நிதி குறைவாக உள்ளதால் மாநில அரசிடம் கேட்டு பெற்று தான் செய்ய வேண்டும் எனவும், தற்போது பொள்ளாச்சி நகராட்சியுடன் நமது ஊராட்சியை சேர்க்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மற்றும் இப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட வேண்டும் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கி கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என அழகிரி ராஜா தெரிவித்தார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.