புதிய குடியிருப்பு தரமில்லாமல் கட்டுவதாக மலைவாழ் மக்கள் புகார்
முறையான தரமான அடிப்படை வசதி கொண்டு தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக எருமப்பாறை, கூமாட்டி, நாகரூற்று, கோழிகமுத்தி உள்ளிட்ட வன கிராமங்கள் உள்ளன. இதில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மலையில் தேன், கிழங்கு எடுத்தல் மற்றும் பயிர் வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர். சில குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட வீடு கட்டி தர வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிரது.
இவர்கள் வசிக்கும் வீடுகள் மண் மற்றும் மூங்கிலால் வீடுகளால் உருவானது. தமிழக அரசு கடந்த நிதி ஆண்டுல் பழங்குடியின மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் 44 வீடுகளும், எருமப்பாறையில் 9 வீடுகளும், கூமாட்டி கிராமத்தில் 25 வீடுகளும் கட்டி வருகின்றனர். இங்கு கட்டப்படும் வீடுகள் தரமற்ற இருப்பதாக மலைவாழ் மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தீரின் சரண்யாவிடம் புகார் அளித்தனர்.
மலைவாழ் மக்கள் கூறும் போது, முறையான தரமான அடிப்படை வசதி கொண்டு தங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். மேலும் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தார் சாலை வசதி, மின்வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.