அரசு மதுபானக் கடைகளின் நேரத்தை குறைக்க பொள்ளாச்சி பாஜகவினர் மனு

பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கடைகள் நேரத்தை குறைக்க வேண்டும் என பாஜகவினர் மனு அளித்தனர்.

Update: 2024-06-24 08:30 GMT

புகார் மனு அளிக்கும் பாஜகவினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தையடுத்து போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சாரயம் மற்றும் கள் விற்பனைகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

பொள்ளாச்சியில் தனியார் பார்கள் அதிக அளவில் உள்ளதால், கல்லூரி மாணவர்கள் மாணவிகள் பள்ளி குழந்தைகள் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும், இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

ஆதலால் பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மார்க் மற்றும் தனியார் மதுபான கடைகள் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டாஸ்மார்க் கடைகள் மற்றும் தனியார் மதுபான கடைகள் பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் கூறிய அவர்கள், கோவை மாவட்டத்திக் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News