கோவை: வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திட்டப்பணிகளை பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்;

Update: 2023-04-27 10:30 GMT

கோவை  மாவட்டம், சமத்தூர் கோட்டூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சமத்தூர் கோட்டூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட  ஆட்சியர்  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் சமத்தூர், கோட்டூர்பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து  ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கோவை மாவட்டம், சமத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் வார்டு எண் 1-ல் சக்தி கார்டன் லே அவுட் பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா, சக்தி கார்டன் முதல் கிருஷ்ணா நகர் வரை ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் 1. 5 கி. மீ நீளத்திற்கு தார்ச் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆனைமலை ஒன்றியம், பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 9. 09 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், கரியாஞ்செட்டி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண் புழு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் அடர்வனம் அமைக்கும் இடம்.

அங்கலக்குறிச்சி ரூ. 70. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுயஉதவிக்குழு கட்டிடம், ரூ. 1. 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடம், கோட்டூர் பேரூராட்சி ஆழியார் பகுதியில் ரூ. 15. 85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல கட்டிடப்பணிகள், கோட்டூர் பேரூராட்சி பகுதியில் ரூ. 5. 60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல பணிகள், கோட்டூர் ஆழியார் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 32. 43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப் பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, சமத்தூர் பேரூராட்சி தலைவர் காளிமுத்து, பில்சின்னாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, அங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருஞானசம்பத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, பாலசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, சமத்தூர் செயல் அலுவலர் தாஜ் நிஷா, கோட்டூர் செயல் அலுவலர் ஜெசிமா பானு ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News