கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பங்கேற்பு

கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-09 11:19 GMT

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களூக்கு கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

உயர் கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

தமிழக அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பல நல திட்டங்கள் தரப்பட்டுள்ளது. ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் வகையில் கனவு திட்டங்கள் எண்ணற்றவை உள்ளன. இது முறையாக பயன்படுத்தி நன்றாக மாணவ மாணவிகள் படித்து மேலே வர வேண்டும்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அதிக அளவில் முக்கியத்துவம் தருகின்றனர். 100% பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கூடுதலாக காவலர்கள் கொண்டு போக்குவரத்து சரி செய்யப்படும். வாக்கு பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா, ஆனைமலை துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News