பெரியநாயக்கன்பாளையத்தில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

Coimbatore News- பெரியநாயக்கன்பாளையத்தில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-08-17 12:45 GMT

Coimbatore News- கைது செய்யப்பட்ட சேட்டு பஸ்வான்

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட குமாரபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக பெரியநாய்க்கன்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் குமாரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநில சேர்ந்த சேட்டு பாஸ்வான் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News