நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
Public Protest To Restart The Stopped Bus திமுக கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public Protest To Restart The Stopped Bus
கோவை மதுக்கரை அருகேயுள்ள திருமலையாம்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனாவுக்கு பின் 3சி என்ற அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. சில பேருந்துகளின் நேரமும் மாற்றப்பட்டு சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மணவ மாணவியர், விவசாய கூலிகள், நகரத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் போக்குவரத்துக் கழக முதன்மை மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். பல முறை புகார் அளித்தும் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காததால், திமுக கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கா.க சாவடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக கவுன்சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனர்.
இது குறித்து திமுக கவுன்சிலர் ரமேஷ் பேசும்போது, நிறுத்திய அரசு பேருந்தை திரும்ப இயக்கச்சொன்னால், வந்துகொண்டிருந்த பேருந்தையும் அதிகாரிகள் நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போக்குவரத்து கழக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இங்கு காந்திபுரத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் கலந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தும், முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், சரிவர பேருந்துகளை இயக்காமலும் போக்குவரத்து நிர்வாகம் இருந்து வந்து உள்ளனர். இதனால் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலகங்கள் செல்லும் பணியாளர்கள் மற்றும் கூலி பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.