கோவையில் மதுபோதையில் டாஸ்மாக்கில் தகராறு : ஒருவர் அடித்துக் கொலை

Coimbatore News- கோவையில் மதுபோதையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.;

Update: 2024-07-14 16:30 GMT
கோவையில் மதுபோதையில் டாஸ்மாக்கில் தகராறு : ஒருவர் அடித்துக் கொலை

Coimbatore News- சிங்காநல்லூர் காவல் நிலையம் ( கோப்பு படம்)

  • whatsapp icon

Coimbatore News, Coimbatore News Today- கோவை இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (50). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சேகர் தனது உறவினரை பார்க்க வெள்ளலூர் சென்றார். பின்னர் அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அருகே மற்றொரு மேஜையில் மது அருந்தி கொண்டு இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டு உள்ளது.

தகராறு முற்றிய நிலையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர் மீண்டும் சேகரை தாக்கி அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்து உள்ளார். அவரை தாக்கிய நபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். அப்பகுதியில் சாரல் மழை பெய்து உள்ளது.

இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சேகர் எழுந்து செல்லவில்லை. அப்பொழுது அங்கு மது அருந்த வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்று உள்ளார். அவரை திருப்பி பார்க்கும் போது கல்லில் பின் பக்க தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்டு சேகரை கீழே தள்ளி கொலை செய்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மார்க் மதுக்கடையில் தகராறு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News