நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கடலை சாகுபடி கிணத்துக்கடவு பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது;

Update: 2023-08-01 04:45 GMT

பைல் படம்

கோயம்புத்தூர்  அருகே கிணத்துக்கடவு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், நிலக்கடலை செடிகளில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை ெதரிவித்து உள்ளனர். கோயம்புத்தூர் கிணத்துக்கடவு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், நிலக்கடலை செடிகளில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி கிணத்துக்கடவு பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு தக்காளிக்கு அடுத்தபடியாக மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் சொக்கனூர், தேவராயபுரம், கோவிந்தாபுரம், சூலக்கல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 87 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலையை பயிரிட்டு உள்ளனர்.

இதற்கிடையில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை திடீரென பெய்யாமல் காலம் தாழ்த்தியது. இதன் காரணமாக நிலக்கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக கருகும் நிலையில் இருந்த நிலக்கடலை செடிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. அவை செழித்து வளர தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக கருகும் நிலையில் இருந்த நிலக்கடலை செடிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. அவை ெசழித்து வளர தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நிலக்கடலை நடவு செய்த 45 நாட்களில் பூக்க தொடங்கும். தொடர்ந்து 105 நாட்களில் காய்க்க தொடங்கும். அதன்பிறகு அறுவடையை தொடங்குவோம். மகிழ்ச்சி பூக்கும்போது களை எடுத்து ஜிப்சம் உரமிட்டு அடியில் மணல் குவித்து வைத்தால் நன்கு வேர்கள் நிலத்தில் இறங்கி அதிக காய்ப்பு ஏற்படும். 2½ ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் உரமிட வேண்டும்.

இதன் மூலம் 3 டன் வரை நிலக்கடலை கிடைக்கும். உரம் வாங்க கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில் பின்னேற்ப்பு மானியமும் வழங்கப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் மழை பெய்யாததால், பருவமழை பொய்த்து விடுமோ என்று அச்சம் அடைந்தோம். ஆனால் தற்போது சாரல் மழை நன்கு பெய்து வருவதால், விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

Similar News