கோவில்பாளையத்தில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
Coimbatore News- கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் வையாபுரி நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் மகஹூர்(32) மற்றும் மதுசூதன் கும்பர் (38) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.