பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற நபர் கைது ; 13 சவரண் நகை பறிமுதல்

அடையாளம் தெரியாத ஒரு நபர் இவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, 13 சவரன் தங்க நகையை பறித்து சென்றார்.

Update: 2024-02-02 15:15 GMT

டாப் பாஸ்கோ

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (57). கடந்த 31ம் தேதி அன்று மல்லிகா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, 13 சவரன் தங்க நகையை பறித்து சென்றார்.

இது தொடர்பாக மல்லிகா பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளியை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி குற்றவாளி குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த டான் போஸ்கோ (57) என்பது தெரியவந்தது. இதையடுத்து டான் போஸ்கோவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 சவரண் தங்க நகைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல குற்றச்செயல்கள் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News