போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது

இளைஞர்கள் காவலர் ஆனந்தை இழிவாக பேசியதோடு, கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Update: 2024-01-20 05:15 GMT

சாய்பாபா காலனி காவல் நிலையம்.

கோவை மாநகர காவல் துறையில் முதல் நிலை காவலராக பணி புரிபவர் ஆனந்த். 30 வயதான இவர் ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையில் போக்குவரத்து காவலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ராஜா லாரி வெயிட் பிரிட்ஜ் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது 3 இளைஞர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஆனந்த் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் காவலர் ஆனந்தை இழிவாக பேசியதோடு, கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சாய்பாபா காலனி காவல் துறையினர் மூன்று இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் செல்வபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீத் (25), குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஹபிப் அலி (26), செல்வபுரம் பகுதியை சேர்ந்த அலாவூதின் முகமது ஹூசைன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News