மணிப்பூர் கலவரம்: இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

YWCA இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2023-08-02 11:30 GMT

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மகளிர் அமைப்பினர்

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் YWCA இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கம் சார்பில்  மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சி தலைவர் சர்மிளா பிரின்ஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் அனிதா வினோத், குமாரி ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மணிப்பூர் ஏன் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது தெரியுமா 

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களின் பரஸ்பர ஒற்றுமை இத்தீயில் அழிந்து வருகிறது.மெய்தேயி, குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழைய பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் தற்போது எரிந்துவருகிறது. பரஸ்பர நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையின்மை தான் எங்கும் நிறைந்திருக்கிறது.

உண்மை என்னவெனில், இந்தியாவின் வடகிழக்குமாநிலமான மணிப்பூரில் இரு சமூகங்களுக்குள் எழுந்த சாதிப் பிரச்னை கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வருகிறது. தொடர்ந்து பதற்றமும் நிலவிவருகிறது.மெய்தேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 390 பேர் காயமடைந்துள்ளனர்.இருப்பினும் இந்த வன்முறைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தான் தற்போதைய கலவரத்திற்கான காரணமாக இருக்கிறது.

கடந்த மே மாதம் 3ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் போது மெய்தேயி மக்கள் குகி மக்களையும், குகி மக்கள் மெய்தேயி மக்களையும் குறிவைத்துத் தாக்கினர்.

மணிப்பூர் இப்போது இரண்டு பிரிவுகளாக உடைந்துகிடக்கிறது.இதில் ஒரு பிரிவு மெய்தேயி மக்கள். மற்றொரு பிரிவு குகி மக்கள்.தற்போதைய வன்முறைகள் ஒரு நாளிலோ, அல்லது இரண்டு முதல் நான்கு நாட்களிலோ முடிந்துவிடும் வன்முறை அல்ல.ஆனால், பல வாரங்களுக்கு - மாதக்கணக்கில் நீடிக்கும் இந்த வன்முறைகளில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான சொத்துக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

எங்கு தவறு நடந்தது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இந்த பிரிவினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.நாடு சுதந்திரம் பெற்ற பின், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றும் மெய்தேயி சமூகத்தினருக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தில் சிலர் பட்டியலின சாதிகளாக உள்ளனர். வேறு சிலர் பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர்.

இதனால் குகி சமூகத்தினரிடம் உள்ள நிலங்களை மெய்தேயி சமூகத்தினர் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது தான் மெய்தேயி சமூகத்துக்கும், குகி சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

தெளிவாகச் சொன்னால், நிலங்களை வாங்குவதற்கான உரிமைகள் குறித்தே தற்போது இரு தரப்புக்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் பேர் வாழும் மணிப்பூரில், பெரும்பான்மையானோர் மெய்தேயி பள்ளத்தாக்கில் தான் வசித்து வருகின்றனர். ஆனால் குகி சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலைப்பகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். இந்த வன்முறைச் சம்பவங்களின் போது, அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களிடையே குடியேறிய மற்றொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News