காவலர்களின் இல்லத்தரசிகளுக்கு தொழில் பயிற்சி

காவலர்களின் மனைவிகளுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது;

Update: 2023-08-05 12:45 GMT

காவலர்களின் மனைவிகளுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இன்று கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரை தொழில்முனைவோராக்கும் முயற்சியாக சுய தொழில் பயிற்சி முகாம் கோவை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி வழங்கும் வல்லுநர் சரஸ்வதி ஈஸ்வரன், ஃபேம் டி. என் மாவட்ட அலுவலர் சாந்த ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு, தொழில் நடத்துவதற்கான கடன் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த முகாமில் ஊறுகாய், ஜாம், ஐஸ்கிரீம், சாக்லேட், குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், சூப் பவுடர் உற்பத்தி என முழுமையாக சிறுதானியங்களை கொண்டு தயாரிப்பது, அதை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் என 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News