மொபைல் ஆப் மூலம் கோடிக்கணக்கில் மோசடி ; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

வாரம் தோறும் தொகைக்கு தகுந்தார் போல் பணம் முதலீடு செய்தர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர்.;

Update: 2024-07-03 14:00 GMT

மொபைல் ஆப் மூலம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம்தோறும் சம்பளம் வரும் எனவும், அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பலரும் 15 ஆயிரம் ரூபாய் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதில் வாரம் தோறும் தொகைக்கு தகுந்தார் போல் பணம் முதலீடு செய்தர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் கடைசி வரை எந்த சம்பளமும் வராததை அறிந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து ஏமாற்றம் அடைந்த கோவையை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த ஜி.எம்.ஆர் ஆப் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News