கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: 1.020 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் விற்பனைக்காக வைத்திருந்த 1.020 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-26 10:24 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையும், விற்பனை செய்பவர்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனலட்சுமி நகர், எஸ்.பெண்ட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக வந்த கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 1.020 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அபிஜித் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அபினந்த் என்பது தெரிய வந்தது. அதைதொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேக்கரி கடையின் முன்பு டீ அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மது அருந்த வேணுகோபாலிடம் பணம் கேட்டு உள்ளனர். என்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்று உள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை அடுத்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வடவள்ளி, தில்லை நகரை சேர்ந்த ராபட், மற்றும் வடவள்ளி பாரதி நகரை சேர்ந்த அர்ஜுன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News