கோவையிலிருந்து திருவண்ணாமலை செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோவை மண்டலத்தில் ஆக. 1 காலை 3: முதல் 2 ம் தேதி அதிகாலை 1 மணி வரை காந்திபுரத்தி லிருந்து 24 பஸ்கள் இயக்கப்ப டுகின்றன

Update: 2023-07-30 12:30 GMT

பைல் படம்

திருவண்ணாமலை செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு போக்குவரத்து கழகம் இன்று தகவல் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்ப வர்களின் வசதிக்காக, கோவை மற்றும் பொள் ளாச்சியிலிருந்து 35 சிறப்பு பஸ்களை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஜோசப்டயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலத்தின் சார்பில் வரும் ஆக. , 1 அன்று காலை 3: 26 முதல் 2ம்தேதி அதிகாலை 1: 05 மணி வரை, கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து 24 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போல், பொள்ளாச்சி வெளியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 11 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது, வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர சிறப்பு பஸ்கள் ஆகும். இதில் பயணிக்க பயணிகள் சிறப்பு கட் டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது... எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும்.

ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப் பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள் உள்ளன.

Tags:    

Similar News