என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என அண்ணாமலைக்கு சவால் விட்ட சிங்கை ராமச்சந்திரன்
ஆண்மகன் என்றால் விவாதத்திற்கு வாருங்கள் என அண்ணாமலைக்கு என சவால் விட்ட சிங்கை ராமச்சந்திரன் மேடை போட்டு பேசலாம் என்றார்.;
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுகவை பற்றி பேசினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது எனவும் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி எனவும் கூறினார். கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை எனவும் எம்ஜிஆர் க்கு நாணயம் வெளியிட்டது மத்திய அரசுக்கு தான் பெருமை என்றார்.
அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்து விடுவதாகவும் பயப்பட கூடியவர்கள் தான் பதற்றம் அடைவார்கள் என கூறினார். அண்ணாமலையின் தந்தையார் அரசியலில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் என தெரிவித்த அவர் அப்போது அவரது தந்தையை தரக்குறைவாக பேசினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் பொழுது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அண்ணா அண்ணா என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை என்றார். மேலும் திருச்சி சூர்யா அண்ணாமலை செய்தது பற்றி பேசி கிழித்து வருவதாகவும் அண்ணாமலை பேசுவதில் அதிக பொய்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மானமுள்ள விவசாயி மகன் என்றால் 2021 ஆம் ஆண்டு எடப்பாடியார் பின்னால் நின்ற அண்ணாமலை எங்கே போனார்? என கேள்வி எழுப்பினார். Go Back Modi என்று திமுக தொடர்ந்து செய்து வந்ததை குறிப்பிட்ட அவர் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலை ரகசியமாக சந்தித்தார் என கேள்வி எழுப்பினார். மேலும் DMK Files என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார் என கேள்வி எழுப்பினார். அண்ணாமலையே விவசாய நிலத்தை விற்று கொண்டு இருப்பதாகவும் ஆனால் தான் விவசாயி மகன் என்று கூறி கொள்வதாகவும் விமர்சித்தார். ஐபிஎஸ் பணியில் இருக்கும் போது எப்படி எத்தனை சொத்துக்கள் வந்தது என கேள்வி எழுப்பிய ராமசந்திரன், கவுன்சிலர் ஆவதற்கு கூட துப்பில்லாதவருக்கே இத்தனை சொத்துக்கள் என்றால் பதவி வந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார். உண்மையான ஆண்மகன் என்றால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என அண்ணாமலைக்கு என சவால் விட்ட சிங்கை ராமச்சந்திரன் மேடை போட்டு பேசலாம் என்றார். அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது அது தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும் 20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை எனவும் YouTube Influencer என சாடினார். அண்ணாமலை பற்றியும் பாஜக பற்றியும் திராவிட கட்சிகள் பற்றியும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புரிந்து கொள்ளும் படி ஹிந்தி மொழியில் பேசினார். பொய் சொல்ல கூச்சமே படாதவர், அகந்தை, தலைகனம், திமிரு இவற்றுக்கு பெயர் போனவர் அண்ணாமலை என விமர்சித்தார்.
தந்தையுடன் சேர்ந்து மண்வெட்டி பிடித்த கை இன்னும் காப்பு இருக்கிறது என்று அண்ணாமலை கூறியது குறித்து கருத்து தெரிவித்த சிங்கை ராமச்சந்திரன் மண்வெட்டி பிடித்து என்ன வேலை செய்தார் என்று பார்க்கிறேன் வரட்டும் என ஒரு ஏக்கர் நிலத்தை சவால் விடுத்தார். அண்ணாமலைக்கு முகவரியே இல்லை, காலையில் எழுந்தால் அவருக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது என சாடினார். முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறிய சிங்கை ராமசந்திரன் அதிமுகவிலிருந்து யாரும் வரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
லண்டனுக்கு அண்ணாமலை படிக்க செல்கிறேன் என்று கூறுவது ஒரு பிம்பம் தான் எனவும் கூறினார். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்தான கேள்விக்கு இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனை நேரடி முதலீட்டை ஈட்டி வந்துள்ளார் என்று கூறிவிட்டு செல்லலாம் எனவும் முதல்வர் இங்கு இருந்தாலே இல்லாதது போன்று தான் இருப்பதாக விமர்சித்தார்.