ஒடிசாவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 7 பேர் கைது

கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-08-05 08:00 GMT

கோவவையில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 7 பேர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மதுவிலக்கு பிரிவு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான காவலர்கள் கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த சிலரை பிடித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள்  பையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சாகு (34), டிரேந்தர் பெர்க்ரா (24), ரஞ்சித நாயக் (23 ), பிரசாந்த் தாகூர் (36), சாகர் முகாரி (57 ), நரேந்திர திரிபாதி (30), பல்தே ஜிபிலா( 20) என்பதும், கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், தொடர்ந்து ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News