வீடற்றவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் மனு

Rental Residents Association Request இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் வீட்டு வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்எனமக்கள் குறைதீர் முகாமில் மனு வழங்கினர்.;

Update: 2024-03-11 11:30 GMT

வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் மனு

Rental Residents Association Request

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதனால் ஏராளமான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் புகார் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் என்ற அமைப்பினர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெள்ளிமலை தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், வாடகைக்கு குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வீட்டு வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் வீடற்ற ஏழைகளுக்கும் எஸ்சி மக்களுக்கும் இலவச பட்டா வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி உடனடியாக வீட்டு வாடகையைக் குறைக்க வேண்டும், இலவச பட்டா வீடற்ற மக்களுக்கு கிடைக்கும் வரையில் வீட்டு வாடகையை அரசே ஏற்க வேண்டும், கொடுத்த மனுக்களை விசாரணை செய்து இலவச பட்டா வழங்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க தனிச்சட்டம் வேண்டும், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும், மாநில அரசின் நிதியை முழுவதும் மத்திய அரசு மாநில அரசிற்கே வழங்க வேண்டும், வாடகை வீடுகளின் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இச்சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News