கோவை அரசு கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் வாயில் முழக்கப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி அலுவலகம் முன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை நடத்தினர்.

Update: 2023-08-02 09:15 GMT

கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்

கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி அலுவலகம் முன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை  நடத்தினர்.

அகில இந்திய அளவில் கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பாக JFME (Joint Forum for Movement on Education) என்ற விரிவடைந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் அகில இந்திய அளவிலான ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், கல்வி நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் (STFI) இதில் அங்கம் வகிக்கிறது.உயர்கல்வியின் வளர்ச்சிக்காக இந்திய அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்

.அகில இந்திய அமைப்பின் இணைந்துள்ள உறுப்பு சங்கங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கோவை கல்லூரி வளாகம் முன்பாக  வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய கோரிக்கையாக தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு 11. 1. 2021 அன்று வெளியிட்ட அரசாணை எண் 5 முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம்  நடைபெற்றது.

Tags:    

Similar News