புதிய தொழில்நுட்பத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்ட பூமி பூஜை

புதிய தொழில்நுட்பத்துடன் பன்னடுக்கு மாடி குடியிருப்பாக கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது

Update: 2023-04-23 11:30 GMT

 கோவையில் உழவர் சந்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பழுதடைந்த 960 வீடுகளை புதிய தொழில்நுட்பத்துடன் பன்னடுக்கு மாடி குடியிருப்பாக மாற்ற நடந்த பூமி பூஜை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 60-வது வார்டு சிங்காநல்லூர் , உழவர் சந்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பழுதடைந்த 960 வீடுகளை புதிய தொழில்நுட்பத்துடன் பன்னடுக்கு மாடி குடியிருப்பாக கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று 23. 04. 203, காலை  நடைபெற்றது.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், ஆரோ மிரா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகம்,  பர்வத வர்த்தினி சண்முகம் மற்றும் கட்டுமான நிறுவன இயக்குனர் சுப்பராயன்,  பிரேமா சுப்பராயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிங்கை சிவா, கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வி. ஜெயராம் , செயலாளர் எம் குணசீலன், சி எஸ் சண்முகம், செந்தில், கண்ணன், குணசேகரன், தமிழ்மணி, மோகனசுந்தரி , சுப்புராஜ் , மனோகரன், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் கூட்டு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர் சுந்தரேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News