சீதாபழத்தில் தீட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓவியம்
சீதாப்பழத்தில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய உருவங்கள் வரையப்பட்டுள்ளன
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா. சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்கு தோன்றியது.
இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார். ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார்.
அதன்படி சீதாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ. உ. சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதரதிலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.
ஓவியம் வரைவது ஒரு சக்தி வாய்ந்த பொழுது போக்காகும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வரும் இந்த மயக்கும் செயல்முறையைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே அது எவ்வளவு வேடிக்கையானது மற்றும் மன அழுத்தத்தை வெளியிடுகிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியும். பழங்கள் கொண்ட ஓவியங்களைப் பார்க்க அருமை. இவை உற்சாகமான தருணங்கள் ஆகும்.
அனுபவம் வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விவசாயிகளால் வளர்க்கப்பட்ட உலகின் மிகவும் சுவையான பழங்களில் எங்களால் கண்டுபிடிக்க முடிந்த சில சிறந்த ஓவியங்கள் கீழே உள்ளன.