கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி

Coimbatore News- கோவை நகர பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

Update: 2024-05-09 14:45 GMT

Coimbatore News- கோவையில் மழை பெய்தது.

Coimbatore News, Coimbatore News Today- தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதன் காரணமாக, பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் கோவை மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று மதியத்திற்கு பிறகு வெயில் தணிந்து காணப்பட்டது. பின்னர் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

கோவை பந்தய சாலை, பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதேபோல பொள்ளாச்சி பகுதியிலும் இன்று மாலை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவையில் இன்று மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News