கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.;

Update: 2023-04-22 15:30 GMT

கோவையில் பெய்த கோடை மழை

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

கோவை மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், பீளமேடு, வடவள்ளி, போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளிலும், புறநகர் பகுதியில் தடாகம், கணுவாய், ஆலாந்துறை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது திடீரென பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News