அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப மையம் ஆய்வு

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அரசு ஐடிஐ - ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசின் தொழில்நுட்ப மையத்தை ஆய்வு செய்தனர்

Update: 2023-08-04 11:00 GMT

கோவையில் அமைக்கப்பட்டுள்ள டாடா மையத்தை பார்வையிட்ட மாவட்ட தொழில் மைய அதிகாரிகள்

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டமான தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

டாட்டா நிறுவனத்துடன் இணைந்து 40 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, தொழில் நுட்பங்களை, தொழில் அமைப்பின் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் ஆட்டோ மொபைல், பயிற்சி அளிப்பதற்கான அதி நவீன இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.. மேலும் தொழில் முனைவோர்களுக்கும், தொழில் கற்றுக் கொள்பவர்களுக்கும், தொழிற் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதன் மூலம் கோவையில் உள்ள தொழில் முனைவோர்களும் தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்பவர்களும், மூன்று மாத காலத்திற்கு பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கோவை தொழில் மைய உதவி பொறியாளர்கள் புவனேஸ்வரன், கணபதிசுந்தரம், என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஒரு தன்னாட்சி நிறுவனமாக உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், அறிவியல், தொழில்நுட்பக் கருத்துகளை பொது மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் பரப்புவதையும், கொண்டு செல்வதையும் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையமானது தமிழகத்தில் சென்னை, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் கோயம்புத்தூரில் அறிவியல் மையங்களை நிறுவியுள்ளது.

1988 ஆம் ஆண்டு சென்னையில் பி.எம்.பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டு சென்னையில் எட்டுத் தலைப்புகளில், அறிவியல் தொழில்நுட்ப காட்சிக் கூடங்களைக் கொண்டு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையமும் நிறுவப்பட்டது. அறிவியல் பூங்காக்களும் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 1999 ஆம்ஆண்டு அண்ணா அறிவியல் மையம் கோளரங்கம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு வேலூரில் மாவட்ட அறிவியல் மையம் நிறுவப்பட்டது. 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றத்துடன் இணைந்து, 4 காட்சிக்கூடங்களுடன் கூடிய மண்டல அறிவியல் மையம் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது.

குறிக்கோள்கள்:அறிவியல் மையங்கள் அமைந்திருக்கும் பகுதி சார்ந்த மாணவர்களும், பொதுமக்களும் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை பெறும் வண்ணம் அப்பகுதிகளில் அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், அறிவியல் முகாம்கள், அறிவியல் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள் என பல்வேறு அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பாடங்களை எளிதாகக் கற்க துணை செய்யும் விதமாக அவ்வப்போது பாடத்திட்டம் சாரா அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துதல், கல்வியியல் நிகழ்ச்சிகளை நடத்துதல். இதன் மூலம் அறிவியல் மனப்பான்மையையும் திறன் உருவாக்கத்தையும் மாணவர்களிடையே மேம்படுத்துதல்.அறிவியல், தொழில்நுட்ப மையங்களுக்கான காட்சிப் பொருட்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், மற்றும் செயலாக்குதல்.அறிவியல் பரப்புரைகளுக்காக செய்முறை கருவிகளையும் துணைக்கருவிகளையும் உருவாக்குதல். இதன் மூலம் அறிவியல் கல்வி பரப்புரை பணிகளை மேற்கொள்ளுதல்

ஆசிரியர்கள், மாணவர்கள், இளம்தொழில் முனைவோர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், குடும்பத் தலைவிகள், மாற்று திறனாளிகள் என அனைவருக்கும் ஏற்றவாறு அறிவியல், தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை நடத்துவது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக அறிவியல் மையங்களை நிறுவுவதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.


Tags:    

Similar News