கோவை மாவட்டத்தில் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்கள் ; இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Final Voters List Released கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
Final Voters List Released
தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்பு பட்டியலானது வெளியிடப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்களும், மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 595 என மொத்தம் 30 லட்சத்து 81ஆயிரத்து 594 வாக்காளர்கள் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4 இலடசத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 பேர் கொண்ட தொகுதிகளாக உள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 426 வாக்காளர்களும், சூலூர் தொகுதியில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 803 வாக்காளர்களும், கோவை வடக்கு தொகுதியில் 3 3 இலட்சத்து 35 ஆயிரத்து 72 வாக்காளர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 85 வாக்காளர்களும், கோவை தெற்கு தொகுதியில் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 220 வாக்காளர்களும், சிங்காநல்லூர் தொகுதியில் 3 இலட்சத்து 27 ஆயிரத்து 491 வாக்காளர்களும், கிணத்துக்கடவு தொகுதியில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 436 வாக்காளர்களும், பொள்ளாச்சி தொகுதியில் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 946 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.