போதைப்பொருட்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: காவல் ஆணையாளர் துவக்கிவைப்பு

கோவையில் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-13 05:30 GMT

பேரணியை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. போதைப் பொருட்களால் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்த குற்ற சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்கும் வகையிலும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இளைஞர்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி நடந்தது.

சைக்கிள் பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை பேரணியில் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பொதுமக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு சைக்கிளில் பயணம் செய்தார்.

இந்த பேரணியில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல் வழியாக ஈசா யோகா சென்று அடையும். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும். சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருட்களுக்கு ஏதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags:    

Similar News