தேர்தல் பிரசாரத்தில் அளித்த பூரண மதுவிலக்கு வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை
தேர்தல் பிரசாரத்தில் அளித்த பூரண மதுவிலக்கு வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கருத்து
திருமண மண்டபங்களில் மது பயன்பாடு குறித்த அரசாணையை சட்டமன்றத்தில் திரும்ப பெற வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி .
கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்த உடன் பூரண மது விலக்குக்கு கையெழுத்து இடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது.அதேபோல டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு அரசாணையில் திருமண மண்டபங்களில் முன் அனுமதி உடன் மதுக்கள் பரிமாறலாம் என வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாலை சரத்துக்கள் மாற்றி மீண்டும் வெளியாகியது. இது மது விலக்குக்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் கடைகளை குறைக்க முயன்றனர்.
நேற்று வெளியாகிய அரசாணை தமிழக மக்களுக்கு எதிரானது. நேற்றைய அரசாணையை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.மேலும் இந்த அரசாணை சர்வதேச அரங்கில் விளையாட்டுக்கு பதிலாக மது ஆசையை தூண்டிவிடுவதற்கு ஏதுவாக உள்ளது. 12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெற வேண்டும்.
சாதிய சிக்கல்களில் இருந்து வெளியே முன்னேறி சென்றவர்களை மீண்டும் தலித் பட்டியலுக்குள் அடைப்பது அம்மக்களுக்கு எதிரானது.தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தில் உள்ளது போல். தடுமாற்றத்தில் உள்ளது.ஆளுநர்க்கு தீர்மானம் அனுப்பிவிட்டு குறை சொல்வார்கள்.அரசு தடுமாறி அரசாணை வெளியிடுகிறது.
டாஸ்மாக்குக்கு எதிராககாங்கிரஸ் கம்யூனிஸ்ட் இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன் வர வேண்டும்.அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான பேரணியில் ஒத்துழைக்க வேண்டும். 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்திமே ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துகிறோம். அதேபோல ஜி ஸ்கொயர், அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவோடு அரசு ஆதரவோடு செயல்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.