சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 169 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது;

Update: 2022-12-23 10:00 GMT

பைல் படம்

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமான பயணிகள் 169 பேருக்கு கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட விமானங் கள் இயக்கப் பட்டு வருகின் றன. தற்போது சீனா உள்பட பல்வேறு நாடுகளில் தொற்று மீண்டும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் விமான நிலையங்களில் பயணிகளுக்கு நாளை முதல் பரி சோதனை செய்ய மத்திய சுகாதாரத் துறை அனைத்து மாநில அரசுகளையும் அறிவு றுத்தி உள்ளது.

இதையடுத்து, கோவை விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறியதாவது: மத்திய அரசின் அறிவுறுத்த லின்பேரிலும், தமிழகஅரசின் உத்தரவின் பேரிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவை விமானநிலைய வளாகத்தில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.தற்போது வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்பே ரிலும், மாநில அரசின் அறிவு |றுத் தலின் பேரிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்.டிபி.சி.ஆர் . செய்யப்பட்டு வருகிறது

அதன்படி நேற்று கோவை விமானநிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கோவையை சேர்ந்த 69பயணிகள், 5 வயதுக்கு உட் பட்ட 5 குழந்தைகள் உள்பட 173பயணிகள் வந்தனர். அவர் களில் 5 குழந்தைகளை தவிர 169 பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி. ஆர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று பரி சோதனை முடிவில் வந்தது. 163 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 10 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த ஆறுமாதங்களுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளன.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்வர் ஆராய்ந்தார்.

தமிழக முதல்வர் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அதிகரித்து கொண்டு இருக்கிற காரணத்தினால் அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2% ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படிருக்கிறது. குறிப்பாக, கோவை, மதுரை திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை அமைக்கப்படும். தமிழகத்தில் ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கொரோனாவிற்கு என்று ஏற்கெனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News