சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற கோரி பாமக புகார் மனு

Coimbatore News- சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-05-27 11:00 GMT

Coimbatore News- பாமக புகார் மனு அளிக்க வந்தனர். 

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இந்த செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. பின்னர் அனுமதியில்லாத செங்கல் சூளைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஏராளமான செங்கல் சூளைகள் மூடப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக தடாகம் சுற்றுவட்டாரத்தில் செங்கல் சூளைகள் மூடியே கிடக்கின்றன.

அதேசமயம் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கோவை மாவட்ட பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில் தடாகம், கணுவாய், சோமையம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத செங்கல் சூளைகள் இயங்கி வருவதாகவும், இதனால் யானைகள் வழித்தடங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளுக்காக வனப்பகுதியை ஓட்டி செம்மண் எடுக்கப்படுவதால் யானைகளின் வழித்தடங்களில் குழிகள் ஏற்பட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதாக கூறிய அவர்கள், சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

பாமக கோவை மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் ஒற்றை காலில் மண்டியிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் அந்த செங்கல் சூளைகளால் அப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து வந்தும், யானைகள் நீர்வழிபாதைகளை ஓவியங்களாக வரைந்து வந்தும், கண்டன பதாகைகளையும் ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News