குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி ; விழாக்கோலமாக்கிய மாணவிகள்!

Coimbatore Republic Day Rehearsal பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2024-01-23 07:45 GMT

 பள்ளி மாணவ, மாணவியரின் குடியரசு தின ஒத்திகை நடந்தது.

Coimbatore Republic Day Rehearsal

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவையில் பல்வேறு பள்ளிகளிலும் குடியரசு தினத்திற்கான கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. கோவையில் வழக்கமாக குடியரசு தினத்தில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்திலும், பள்ளி கல்லூரி வளாகங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பதும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதும் நடந்து வருகிறது. பின்னர் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அந்த வகையில், கோவை அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், வெவ்வேறு விதமான டிரில்கள், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மோப்பநாய் உதவியுடன் வெடி குண்டு நிபுணர்கள் சோதனைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News