கோவையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்

கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, போன்ற குற்ற வழக்குகளை திறம்படக் கையாண்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது

Update: 2023-04-25 06:30 GMT

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தி  சான்றிதழ்  வழங்கிய  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

கோவை மாவட்ட மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் இன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். 

இவ்விவாதிப்பு கூட்டத்தில், கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை, போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறும் வகையில்  சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 1 காவல் ஆய்வாளர், 5 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 14 காவலர்கள், என 22 நபர்களை, பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News